பச்சையாய் விரிந்து கிடக்கும்
தேயிலை தோட்டத்திலும்
சிவப்பு பழங்களை தாங்கிய
காப்பி செடிகளிலும்
வியர்வை கலந்த
மழை நீரின் வெள்ளத்திலும்
இழந்த துக்கதிற்காய்
உறங்கிப்போன உடல்களிலும்
உடலோடு ஒட்டிப்போய்
உப்பை மட்டும் மிச்சம் வைத்த
காக்கி சட்டைகளிலும்
வண்ண வண்ண நிறங்களில் பூத்திருக்கும்
குரோட்டன் செடிகளிலும்
நெருங்கி நிற்கும்
முல்செடியின் ஊடையும்
தெளிவாய் வெட்ட பட்ட
பாதைகளின் அமைப்புகளிலும்
ஒரு நேர சோற்றுக்காய்
காத்து கிடக்கும்
நடைபாதை தள்ளு வண்டியின்
தட்டுச் சோற்றுக்குள்ளும்
மாதம் முதல் தொடங்கி
முடியும் வர உழைத்துவிட்டு
சம்பளதிற்காய் காத்து நிற்கும்
தொழிலாளியின் கால்களிடத்தும்
கலந்தே கிடக்கிறது உழைப்பு
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
உன் வருகை
என் வாசல் உன் வரவிற்காய்
காத்து கிடக்கும்
உன் பாதம் கடந்த பாதை எல்லாம்
விழிகள் பார்த்து நிற்கும்
நீ போகும் பொது விட்டு சென்ற
சின்னஞ்சிறு ஒரு முத்தம்
அதுவரை எனை உயிரோடு
வாழ வைத்திருக்கும்
உன்னோடு உறங்க செல்வதற்கு
நான் மலர்ப்படுக்கையை
ஆயத்த படுத்தி வைப்பேன் -அதில்
கனவுளும் தூங்கட்டுமென்று சிறிதாய்
இடமொன்று ஒதுக்கி வைப்பேன்
நீ கொண்டுவரும் மல்லிகையின் வாசத்திற்காய்
என் கூந்தலை கொஞ்சம் அலசி வைப்பேன்
வீட்டினுள் வந்ததுமாய் நீ
தேடும் என் மடியின் ஓரத்தை
சற்று தளர்த்தி வைப்பேன்
வழக்கம் போல நீயும் வருவாய்
எனைக் காணததுபோல்
உள்ளே செல்வாய்
விக்கித்து நின்ற
என் பின்னல் வந்து தளுவிக்கொள்வாய்
நீ இல்லாத காலங்களின்
துயரங்கள் தொலைந்து போகும்
நான் உன்னுடன் மகிழ்வுடன் களிகூருவேன் .....
காத்து கிடக்கும்
உன் பாதம் கடந்த பாதை எல்லாம்
விழிகள் பார்த்து நிற்கும்
நீ போகும் பொது விட்டு சென்ற
சின்னஞ்சிறு ஒரு முத்தம்
அதுவரை எனை உயிரோடு
வாழ வைத்திருக்கும்
உன்னோடு உறங்க செல்வதற்கு
நான் மலர்ப்படுக்கையை
ஆயத்த படுத்தி வைப்பேன் -அதில்
கனவுளும் தூங்கட்டுமென்று சிறிதாய்
இடமொன்று ஒதுக்கி வைப்பேன்
நீ கொண்டுவரும் மல்லிகையின் வாசத்திற்காய்
என் கூந்தலை கொஞ்சம் அலசி வைப்பேன்
வீட்டினுள் வந்ததுமாய் நீ
தேடும் என் மடியின் ஓரத்தை
சற்று தளர்த்தி வைப்பேன்
வழக்கம் போல நீயும் வருவாய்
எனைக் காணததுபோல்
உள்ளே செல்வாய்
விக்கித்து நின்ற
என் பின்னல் வந்து தளுவிக்கொள்வாய்
நீ இல்லாத காலங்களின்
துயரங்கள் தொலைந்து போகும்
நான் உன்னுடன் மகிழ்வுடன் களிகூருவேன் .....
திங்கள், 19 ஏப்ரல், 2010
என் காதலே...
ஓஹ் என் இனிய பாடலே ...
என் ராகங்கள் கேள்
இனிய கானங்கள் நம்
காதலை வேன்றுவிடட்டும்
ஓஹ் என் இனிய ராகமே...
பெருத்த காற்றின் சத்தத்திலே
குரல் எழுப்பும் குயிலாய்
நம் வாழ்வின் வசந்தகாலங்களை
நீ எப்படி இவளவு அழகாய் பாடுகிறாய்
ஓஹ் என் இனிய நிலவே...
இந்த இந்த இரவு காலத்தில்
எங்கிருந்தோ அழைப்புக்குரல் கேட்கிறது
அது ராகதேவதையின் விருப்பமாகவும் இருக்கலாம்
என் கால்கள் விரைவாய் எழுகின்றன
ஓஹ் என் இனிய காதலே...
உன் நினைவுகள் பீதோவன் இசைக்குறிப்புகள் போல்
எக்காலமும் இன்பமான இசைசையே தருகிறது
ஓஹ் என் இனிய காதலே...
அந்த தொடர்வண்டியின் சதம்
ஓர் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நீ என்னுடன் பயணிப்பதை
மிகவும் ஆரவாரமாய் சொல்லிச் செல்கிறது
ஓஹ் என் இனிய காதலே...
நெடும் மலைத்தொடர்களாய்
வற்றிப்போன பாலைவனத்தின் சிறு நிழலாய்
தாகம் தீர்க்காத பெரும் கடலின் முத்தாய்
உன் இனிய பாடல்
விரிந்தே கிடக்கிறது
என்னுள் பூரணமாய்
ஓஹ் என் இனிய காதலே...
உனக்காய் வரையும்
எல்லா கடிதங்களிலும்
உன் மீது உண்டான காதலே பாடல்களாய் நிரம்பி வழிகிறது
ஓஹ் என் காதலே...
இந்த மாலை பொழுதுகள்
உறங்க செல்லும் மட்டும்
நன் உன்னை பற்றி பாடிக்கொண்டு தன இருப்பேன்
இந்த இரவுகள் உன் பாடலோடு என்னுள் கலந்து விடட்டும்
ஓஹ என் காதலே...
என் ராகங்கள் கேள்
நம் காதல் வாழட்டும் .
அன்புடன் நான் ....
என் ராகங்கள் கேள்
இனிய கானங்கள் நம்
காதலை வேன்றுவிடட்டும்
ஓஹ் என் இனிய ராகமே...
பெருத்த காற்றின் சத்தத்திலே
குரல் எழுப்பும் குயிலாய்
நம் வாழ்வின் வசந்தகாலங்களை
நீ எப்படி இவளவு அழகாய் பாடுகிறாய்
ஓஹ் என் இனிய நிலவே...
இந்த இந்த இரவு காலத்தில்
எங்கிருந்தோ அழைப்புக்குரல் கேட்கிறது
அது ராகதேவதையின் விருப்பமாகவும் இருக்கலாம்
என் கால்கள் விரைவாய் எழுகின்றன
ஓஹ் என் இனிய காதலே...
உன் நினைவுகள் பீதோவன் இசைக்குறிப்புகள் போல்
எக்காலமும் இன்பமான இசைசையே தருகிறது
ஓஹ் என் இனிய காதலே...
அந்த தொடர்வண்டியின் சதம்
ஓர் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நீ என்னுடன் பயணிப்பதை
மிகவும் ஆரவாரமாய் சொல்லிச் செல்கிறது
ஓஹ் என் இனிய காதலே...
நெடும் மலைத்தொடர்களாய்
வற்றிப்போன பாலைவனத்தின் சிறு நிழலாய்
தாகம் தீர்க்காத பெரும் கடலின் முத்தாய்
உன் இனிய பாடல்
விரிந்தே கிடக்கிறது
என்னுள் பூரணமாய்
ஓஹ் என் இனிய காதலே...
உனக்காய் வரையும்
எல்லா கடிதங்களிலும்
உன் மீது உண்டான காதலே பாடல்களாய் நிரம்பி வழிகிறது
ஓஹ் என் காதலே...
இந்த மாலை பொழுதுகள்
உறங்க செல்லும் மட்டும்
நன் உன்னை பற்றி பாடிக்கொண்டு தன இருப்பேன்
இந்த இரவுகள் உன் பாடலோடு என்னுள் கலந்து விடட்டும்
ஓஹ என் காதலே...
என் ராகங்கள் கேள்
நம் காதல் வாழட்டும் .
அன்புடன் நான் ....
உன்னை பற்றி ஒரு பாடல்
கவிதைகள் பாடச்சொன்னால்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
காதலை பாடச்சொன்னாலும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
துயரத்தின் கண்ணீர் துளிக்கும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
பட்டாம் பூச்சியின் வண்ணங்களுக்கும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
இந்த பிரபஞ்சம் முழுதும்
நீயே நிறைந்திருக்கிறாய்
காற்றின் வழியே சுற்றிதிரிகிறாய்
நதி அலைகளின் சப்தத்தில் தாளமிடுகிறாய்
நாணலின் மேனியிலே
ஆடவும் செய்கிறாய்
பயணங்களில் எல்லாம்
காலத்தை கடத்தி போகிறாய்
பருவங்களில் எல்லாம்
முகங்கள் காட்டுகிறாய்
திசைகள் தோறும் பயணபடுகிறாய்
பஞ்சமுக கடவுளாகவும்
பரதேசியின் பட்டினியாகவும் வாழ்கிறாய்
இசையின் சுரங்களில்
ஏழையும் பிறப்பிக்கிறாய்
இன்னும் எத்தனை எத்தனையோ
அவ்வளவும் உன் உருவாக
அன்புடன் நான் ...
நான் உன்னை பற்றியே பாடுவேன்
காதலை பாடச்சொன்னாலும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
துயரத்தின் கண்ணீர் துளிக்கும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
பட்டாம் பூச்சியின் வண்ணங்களுக்கும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
இந்த பிரபஞ்சம் முழுதும்
நீயே நிறைந்திருக்கிறாய்
காற்றின் வழியே சுற்றிதிரிகிறாய்
நதி அலைகளின் சப்தத்தில் தாளமிடுகிறாய்
நாணலின் மேனியிலே
ஆடவும் செய்கிறாய்
பயணங்களில் எல்லாம்
காலத்தை கடத்தி போகிறாய்
பருவங்களில் எல்லாம்
முகங்கள் காட்டுகிறாய்
திசைகள் தோறும் பயணபடுகிறாய்
பஞ்சமுக கடவுளாகவும்
பரதேசியின் பட்டினியாகவும் வாழ்கிறாய்
இசையின் சுரங்களில்
ஏழையும் பிறப்பிக்கிறாய்
இன்னும் எத்தனை எத்தனையோ
அவ்வளவும் உன் உருவாக
அன்புடன் நான் ...
திங்கள், 5 ஏப்ரல், 2010
வாழ்க பெண்ணே என்னசெய்கிறாய்,
நான் தொலை தூரத்தில் தான் இருக்கிறேன் உன் அருகாமையின் நினைவுகளோடு . இங்கே நீ இன்னும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறாய், உன் பார்வைகள் அவ்வப்போது என்னை பார்த்து கொண்டே இருக்கிறது. நன் திட்டும் பொது தேம்பி தேம்பி அழுது கொண்டும் இருக்கிறாய் . நன் நலமாகத்தான் இருக்கிறேன்.
நம் வசந்தகாலங்களில் கொஞ்சம் பயணித்து பார், நீயும் நானும் நிலவினி கல்லெறிந்து கொலை செய்தோம் குளத்திற்குள் . கடற்கரை மணலோடு புதைந்து கிடந்தோம் அலைகளின் தொடுதலுக்காக.
எப்படி இருக்கிறது நம் சந்தித்து கொள்ளும் உன் வீட்டு மொட்டை மாடி .உன் பக்கத்துக்கு பாட்டி நம் கதையும் யாருக்கேனும் சொல்லுகிறாள?.
நானும் நீயும் பயணித்த கலங்களின் அடையாளங்கள் இன்னும்
அளிக்கபடாமலா இருக்கிறது .
நான் தொலை தூரத்தில் தான் இருக்கிறேன் உன் அருகாமையின் நினைவுகளோடு . இங்கே நீ இன்னும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறாய், உன் பார்வைகள் அவ்வப்போது என்னை பார்த்து கொண்டே இருக்கிறது. நன் திட்டும் பொது தேம்பி தேம்பி அழுது கொண்டும் இருக்கிறாய் . நன் நலமாகத்தான் இருக்கிறேன்.
நம் வசந்தகாலங்களில் கொஞ்சம் பயணித்து பார், நீயும் நானும் நிலவினி கல்லெறிந்து கொலை செய்தோம் குளத்திற்குள் . கடற்கரை மணலோடு புதைந்து கிடந்தோம் அலைகளின் தொடுதலுக்காக.
எப்படி இருக்கிறது நம் சந்தித்து கொள்ளும் உன் வீட்டு மொட்டை மாடி .உன் பக்கத்துக்கு பாட்டி நம் கதையும் யாருக்கேனும் சொல்லுகிறாள?.
நானும் நீயும் பயணித்த கலங்களின் அடையாளங்கள் இன்னும்
அளிக்கபடாமலா இருக்கிறது .
கடவுளினும்
கடவுள் பிறந்தான் பூமியிலே
காதல் கனவு கண்டு
கால் வரை தொட்டது காதல்
கண்டு களித்தான்
இடுப்பின் ஓரம் ஏறிக்கொண்டது
மகிழ்வு கொண்டான்
கழுத்தின் மேலும் கவ்விகொண்டது
கனவை மட்டும் மறக்கவில்லை
உச்சியும் தொட்டது காதல்
விஷம் கொண்டான்
போதையில் அவன் பிதற்றுகிறான்
கவிதைகள் பிறக்கிறது
காதல் பிறக்கவில்லை அவளிடம்
தாடி வளர்த்தான்
அவள் பிரிந்து போன பின்
உற்றதும் இழந்தான்
உடுத்திய ஆடை அவிழ்ந்தான்
கல்லறையில் மறித்து வீழ்ந்தான்
இதயத்தில் அவளின் நினைவாகவே
காதலுக்கு கடவுள் மட்டும்
தனிபிரவியா என்ன
கல்லறை வாசம் கண்ட அவனும்
கண்டிருப்பான் காதல் எது வென்பதை
காதல் கனவு கண்டு
கால் வரை தொட்டது காதல்
கண்டு களித்தான்
இடுப்பின் ஓரம் ஏறிக்கொண்டது
மகிழ்வு கொண்டான்
கழுத்தின் மேலும் கவ்விகொண்டது
கனவை மட்டும் மறக்கவில்லை
உச்சியும் தொட்டது காதல்
விஷம் கொண்டான்
போதையில் அவன் பிதற்றுகிறான்
கவிதைகள் பிறக்கிறது
காதல் பிறக்கவில்லை அவளிடம்
தாடி வளர்த்தான்
அவள் பிரிந்து போன பின்
உற்றதும் இழந்தான்
உடுத்திய ஆடை அவிழ்ந்தான்
கல்லறையில் மறித்து வீழ்ந்தான்
இதயத்தில் அவளின் நினைவாகவே
காதலுக்கு கடவுள் மட்டும்
தனிபிரவியா என்ன
கல்லறை வாசம் கண்ட அவனும்
கண்டிருப்பான் காதல் எது வென்பதை
சனி, 3 ஏப்ரல், 2010
நீ
என் தூரிகையின் தழுவல்களை
செதுக்கி வைத்திருக்கிறாய்
பேரழகாய்
என் பாடலின் வரிகளை
வெறும் வார்த்தைகளை போலவே
உதிர்த்துவிட்டு செல்கிறாய்
செதுக்கி வைத்திருக்கிறாய்
பேரழகாய்
என் பாடலின் வரிகளை
வெறும் வார்த்தைகளை போலவே
உதிர்த்துவிட்டு செல்கிறாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)