feedback

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உன் வருகை

என் வாசல் உன் வரவிற்காய்
காத்து கிடக்கும்

உன் பாதம் கடந்த பாதை எல்லாம்
விழிகள் பார்த்து நிற்கும்

நீ போகும் பொது விட்டு சென்ற
சின்னஞ்சிறு ஒரு முத்தம்
அதுவரை எனை உயிரோடு
வாழ வைத்திருக்கும்


உன்னோடு உறங்க செல்வதற்கு
நான் மலர்ப்படுக்கையை
ஆயத்த படுத்தி வைப்பேன் -அதில்
கனவுளும் தூங்கட்டுமென்று சிறிதாய்
இடமொன்று ஒதுக்கி வைப்பேன்

நீ கொண்டுவரும் மல்லிகையின் வாசத்திற்காய்
என் கூந்தலை கொஞ்சம் அலசி வைப்பேன்

வீட்டினுள் வந்ததுமாய் நீ
தேடும் என் மடியின் ஓரத்தை
சற்று தளர்த்தி வைப்பேன்

வழக்கம் போல நீயும் வருவாய்
எனைக் காணததுபோல்
உள்ளே செல்வாய்
விக்கித்து நின்ற
என் பின்னல் வந்து தளுவிக்கொள்வாய்
நீ இல்லாத காலங்களின்
துயரங்கள் தொலைந்து போகும்
நான் உன்னுடன் மகிழ்வுடன் களிகூருவேன் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக