ஓஹ் என் இனிய பாடலே ...
என் ராகங்கள் கேள்
இனிய கானங்கள் நம்
காதலை வேன்றுவிடட்டும்
ஓஹ் என் இனிய ராகமே...
பெருத்த காற்றின் சத்தத்திலே
குரல் எழுப்பும் குயிலாய்
நம் வாழ்வின் வசந்தகாலங்களை
நீ எப்படி இவளவு அழகாய் பாடுகிறாய்
ஓஹ் என் இனிய நிலவே...
இந்த இந்த இரவு காலத்தில்
எங்கிருந்தோ அழைப்புக்குரல் கேட்கிறது
அது ராகதேவதையின் விருப்பமாகவும் இருக்கலாம்
என் கால்கள் விரைவாய் எழுகின்றன
ஓஹ் என் இனிய காதலே...
உன் நினைவுகள் பீதோவன் இசைக்குறிப்புகள் போல்
எக்காலமும் இன்பமான இசைசையே தருகிறது
ஓஹ் என் இனிய காதலே...
அந்த தொடர்வண்டியின் சதம்
ஓர் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நீ என்னுடன் பயணிப்பதை
மிகவும் ஆரவாரமாய் சொல்லிச் செல்கிறது
ஓஹ் என் இனிய காதலே...
நெடும் மலைத்தொடர்களாய்
வற்றிப்போன பாலைவனத்தின் சிறு நிழலாய்
தாகம் தீர்க்காத பெரும் கடலின் முத்தாய்
உன் இனிய பாடல்
விரிந்தே கிடக்கிறது
என்னுள் பூரணமாய்
ஓஹ் என் இனிய காதலே...
உனக்காய் வரையும்
எல்லா கடிதங்களிலும்
உன் மீது உண்டான காதலே பாடல்களாய் நிரம்பி வழிகிறது
ஓஹ் என் காதலே...
இந்த மாலை பொழுதுகள்
உறங்க செல்லும் மட்டும்
நன் உன்னை பற்றி பாடிக்கொண்டு தன இருப்பேன்
இந்த இரவுகள் உன் பாடலோடு என்னுள் கலந்து விடட்டும்
ஓஹ என் காதலே...
என் ராகங்கள் கேள்
நம் காதல் வாழட்டும் .
அன்புடன் நான் ....
//நீ இல்லாத காலங்களின்
பதிலளிநீக்குதுயரங்கள் தொலைந்து போகும்
நான் உன்னுடன் மகிழ்வுடன் களிகூருவேன் .....//
super. all lines r impressive.