feedback

திங்கள், 5 ஏப்ரல், 2010

வாழ்க பெண்ணே என்னசெய்கிறாய்,
நான் தொலை தூரத்தில் தான் இருக்கிறேன் உன் அருகாமையின் நினைவுகளோடு . இங்கே நீ இன்னும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறாய், உன் பார்வைகள் அவ்வப்போது என்னை பார்த்து கொண்டே இருக்கிறது. நன் திட்டும் பொது தேம்பி தேம்பி அழுது கொண்டும் இருக்கிறாய் . நன் நலமாகத்தான் இருக்கிறேன்.

நம் வசந்தகாலங்களில் கொஞ்சம் பயணித்து பார், நீயும் நானும் நிலவினி கல்லெறிந்து கொலை செய்தோம் குளத்திற்குள் . கடற்கரை மணலோடு புதைந்து கிடந்தோம் அலைகளின் தொடுதலுக்காக.
எப்படி இருக்கிறது நம் சந்தித்து கொள்ளும் உன் வீட்டு மொட்டை மாடி .உன் பக்கத்துக்கு பாட்டி நம் கதையும் யாருக்கேனும் சொல்லுகிறாள?.
நானும் நீயும் பயணித்த கலங்களின் அடையாளங்கள் இன்னும்
அளிக்கபடாமலா இருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக